/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகராட்சியில் குதறப்பட்ட நிலையில் குமணன் வீதி :பல்லாங்குழி சாலைகளால் பந்தாடப்படும் மக்கள்

ADDED : செப் 01, 2025 01:53 AM
ஈரோடு;ஈரோடு மாநகராட்சி, 39வது வார்டுக்கு உட்பட்ட குமணன் வீதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. வீதியின் நுழைவு பகுதியில் பிரசித்தி பெற்ற சின்ன மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்களும், பண்டிகை காலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் வருவது வழக்கம். இந்நிலையில் குமணன் வீதியில் உள்ள தார்சாலை மற்றும் கான்கிரீட் குறுக்கு சாலைகள் முற்றிலும் பெயர்ந்து மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் குடியிருப்புவாசிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது:
எங்களது வீதியில் தார்ச்சாலை போட்டு பல வருடங்களாகிறது. குறுக்கு சந்துகளில் கான்கீரிட் சாலைகளும் சேதமடைந்துள்ளது. தார்ச்சாலை போடாததால் அதன் மட்டம் கீழே இறங்கி உள்ளது. இதனால் சாலை நடுவில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை மேன்ஹோல்கள், சாலை மட்டத்தை விட ஒரு அடி உயரத்துக்கு மேலே வந்து விட்டது. வீதியும் குறுகலாக உள்ளதால் எந்த வாகனமும் உள்ளே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இவ்வாறு கூறினர்.