/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேர்தல் காலத்தில் மட்டுமே சீரமைக்கப்படும் சாலை: சூரம்பட்டி மக்களின் கவலைக்கு கிடைக்குமா தீர்வு?

ADDED : செப் 01, 2025 01:54 AM
ஈரோடு;ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் இருந்து, சூரம்பட்டி வலசுக்கு செல்லும் வழியில் ஏராளமான குடியிருப்புகள், வணிக கடைகள் உள்ளன.
மாநகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக உள்ளது. ஆனால் இப்பகுதி தார்ச்சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. குறிப்பாக சூரம்பட்டி நால்ரோட்டில் இருந்து ஜெகநாதபுரம் காலனி வரை, 2 கி.மீ., துார சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது: சூரம்பட்டி சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். பல்வேறு பணிகளுக்காக அடிக்கடி சாலையை தோண்டுகின்றனர். ஆனால், பணி முடிந்த பிறகு சீரமைக்காமல் கிடப்பில் விட்டு விடுகின்றனர். இதனால் வாகனத்தை ஓட்டி செல்வதே பெரும் சவாலாக உள்ளது.
ஒரு சினிமா படத்தில் நகைச்சுவை நடிகர் விவேக் கூறுவது போல், பிரசவத்திற்காக செல்பவர்கள் இந்த ரோட்டில் பயணித்தால், பாதியிலேயே குழந்தை பிறக்கும் என்பதைப்போல் தான் சாலைகள் உள்ளன. தேர்தல் சமயத்தில் மட்டும்தான் செப்பனிடும் பணி நடக்கிறது.
மற்ற நேரங்களில் இதே கதி தான். தார்ச்சாலைகளை புதுப்பிப்பதற்கான விடிவு காலம் எப்போது வரும்? என எதிபார்த்து காத்திருக்கிறோம்.
இவ்வாறு கூறினர்.