/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கபாலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா
/
கபாலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா
ADDED : செப் 06, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு :ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், 2022ல் கும்பாபிஷேகம் நடந்தது. மூன்றாண்டு நிறைவுயொட்டி, ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அஷ்டோத்திர சத கலச இரண்டாம் கால யாக பூஜை, தீபாராதனை நடந்தது.
அதை தொடர்ந்து மூல மூர்த்திக்கு திரவிய அபிஷேகம், 108 கலசாபிஷேகம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலையில் வாருணாம்பிகை சமேத ஆருத்ர கபாலீஸ்வருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, ஷோடச உபசார பூஜை, திருவீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.