/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பத்ரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
/
பத்ரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : ஆக 23, 2024 04:33 AM
ஈரோடு: ஈரோடு கள்ளுக்கடை மேட்டில் உள்ள பிரசித்தி பெற்ற, கொண்-டத்து பத்ரகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா, 20ம் தேதி கணபதி ஹோமம், தனலட்சுமி ஹோமத்துடன் தொடங்கி-யது.
நேற்று முன்தினம் விநாயகர் பூஜை, விஷேச சந்தி, இரண்டாம் கால பூஜை, பூர்ணாகுதி, மூன்றாம் யாக பூஜை, திரவ்யாகுதி, அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று காலை, 7.45 மணிக்கு மங்கள இசை, விநாயகர் பூஜை, ரக்ஷாபந்தனம், வேதிகார்ச்சனை, நான்காம் யாக பூஜை, நாடி சந்தனமும், காலை 9:15 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்-பாடும் நடந்தது.
காலை 9:30 மணிக்கு, கொண்டத்து பத்ரகாளியம்மன் ஆலய விமான கோபுர கும்பாபிஷேகமும், 9:50 மணிக்கு பத்ரகாளி-யம்மன் மூலவர் மற்றும் அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகமும் வெகு விமரிசையாக நடந்தது. இதில் திர-ளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிப்பட்டனர். கொண்-டத்து பத்ரகாளியம்மன் அன்னதான குழு நண்பர்கள் அறக்கட்-டளை சார்பில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்-னதானம் வழங்கப்பட்டது.