/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கைலாசநாதர் கோவிலில் டிச.,1ல் கும்பாபிஷேகம்
/
கைலாசநாதர் கோவிலில் டிச.,1ல் கும்பாபிஷேகம்
ADDED : நவ 25, 2025 01:47 AM
சென்னிமலை, செசன்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் உப கோவிலான கைலாசநாதர் கோவில், சென்னிமலை டவுன் கிழக்கு ராஜவீதியில் அமைந்துள்ளது. கோவிலில், 2005ல் கும்பாபிஷேகம் நடந்தது. 20 ஆண்டுகளான நிலையில், மகா கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்து, ராஜகோபுரம், மகாமண்டபம், விமானங்களில் வர்ணங்கள் தீட்டப்பட்டு திருப்பணி வேலை முடிந்துள்ளது. வரும் டிச., 1-ம் தேதி காலை, 6:30 மணிக்கு மேல், 7:25 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சரவணன், அறங்காவல குழு தலைவர் பழனிவேல், உறுப்பினர்கள் மனோகரன், பாலசுப்பிரமணியம், கண்காணிப்பாளர் மாணிக்கம் மற்றும் கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.

