/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; பவானியில் போக்குவரத்து மாற்றம்
/
செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; பவானியில் போக்குவரத்து மாற்றம்
செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; பவானியில் போக்குவரத்து மாற்றம்
செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; பவானியில் போக்குவரத்து மாற்றம்
ADDED : டிச 06, 2024 07:44 AM
பவானி: பவானி செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, வரும், 8ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பவானி செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வரும், 8ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு, பவானி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வர். பவானி நகருக்குள் வரும் வாகனங்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வரும், 8ம் தேதி வரை, மேட்டூரில் இருந்து ஈரோடு செல்லும் அனைத்து வாகனங்களும், பவானி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, புதுப்பாலம் வழியாக, குமாரபாளையத்தை சுற்றி செல்ல வேண்டும்.
ஈரோடு, கோவை மற்றும் சேலம் செல்லும் அனைத்து வாகனங்களும், ஆப்பக்கூடல், தளவாய்பேட்டை வழியாக காலிங்கராயன் பாளையம் செல்ல வேண்டும். ஈரோடு, கோவை மற்றும் சேலம் பகுதிகளில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும், பவானி லட்சுமி நகர் பிரிவிலிருந்து, குமாரபாளையம் வழியாக, பவானி புதுப்பாலம் வழியாக நகருக்குள் செல்ல வேண்டும்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள், கார் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவதை தவிர்க்கும்படி, போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். அந்தியூர் பகுதியில் இருந்து வரும் நான்கு சக்கர வாகனங்கள், பண்டார அப்புச்சி கோவில் எதிரில் உள்ள காலி இடத்திலும், பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், டூவீலர்கள் பவானி தேர் வீதியில் உள்ள கான்கிரீட் தளத்தின் மீது நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பவானி போலீசார் தெரிவித்துள்ளனர்.