/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மதிப்பாபுரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
/
மதிப்பாபுரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : ஜூலை 03, 2025 01:17 AM
பு.புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டி அருகே வெங்கநாயக்கன் பாளையத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, மதிப்பாபுரி அம்மன் கோவில் உள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த சில மாதங்களாக கோவிலில் திருப்பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில், நேற்று கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. முன்னதாக பவானி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடத்துடன் முளைப்பாரி எடுத்து வரப்பட்டது.
தொடர்ந்து வேள்வி பூஜைகள் நடந்து வந்த நிலையில், நேற்று காலை யாகபூஜையை தொடர்ந்து கோபுரங்களுக்கு, கலசம் எடுத்து செல்லப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. 10:00 மணியளவில், மதிப்பாபுரி அம்மன் கோபுர கலசத்திற்கு, புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், மூலவர் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும்
அன்னதானம் வழங்கப்பட்டது.