நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை :சென்னிமலை யூனியன் முகாசிபிடாரியூர் ஊராட்சி, 1010 நெசவாளர் காலனியில் சக்தி மாரியம்மன் மற்றும் விநாயகர் கோவில் கட்டப்பட்டது.
இதன் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. முன்னதாக ஊர் மக்கள் முளைப்பாரி எடுத்தல் மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பெண்கள் பங்கேற்றனர். மாரியம்மன், விநாயகர் மூலாலய திருக்குட நன்னீட்டு விழா, மகா தீபாராதனை நேற்று காலை நடந்தது.

