/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை
/
குமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை
குமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை
குமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை
ADDED : மே 22, 2025 01:42 AM
நம்பியூர், நடந்து முடிந்த, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில், குமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் சஞ்சய் பிரணவ் என்ற மாணவர், 500க்கு 493 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார். அந்த மாணவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் முறையே தமிழ், -95, ஆங்கிலம், -99 கணிதம், 99, அறிவியல், -100, சமூக அறிவியல், -100.
மேலும் தேர்வெழுதிய மாணவர்களில் மூன்று பேர் சமூக அறிவியலிலும், அறிவியல் பாடத்தில் ஒருவரும், 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய, 74 மாணவர்களில், 20 பேர் 450 மதிப்பெண்களுக்கு மேலும், 47 மாணவர்கள், 400 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் ஜனகரத்தினம் பாராட்டி பரிசு வழங்கினார். துணை தாளாளர் சுகந்தி, பள்ளி செயலர் டாக்டர் அரவிந்தன், இணை செயலர் டாக்டர் மாலினி, விளையாட்டு இயக்குனர் பாலபிரபு. பள்ளி முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் உட்பட பலர் பாராட்டினர். தேசிய மற்றும் சர்வதேச அளவில் விளையாட்டில் சாதனை படைத்த பள்ளியாகவும், கல்வியிலும் சாதனை படைத்து வரும் பள்ளியாகவும் குமுதா பள்ளி திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.