/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேசிய பீச் வாலிபால் போட்டியில் குமுதா பள்ளிக்கு வெள்ளி பதக்கம்
/
தேசிய பீச் வாலிபால் போட்டியில் குமுதா பள்ளிக்கு வெள்ளி பதக்கம்
தேசிய பீச் வாலிபால் போட்டியில் குமுதா பள்ளிக்கு வெள்ளி பதக்கம்
தேசிய பீச் வாலிபால் போட்டியில் குமுதா பள்ளிக்கு வெள்ளி பதக்கம்
ADDED : ஜன 06, 2025 02:23 AM
ஈரோடு: இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில், 68-வது தேசிய அளவிலான கடற்கரை கையுந்து பந்து போட்டி, ஒடிசா மாநிலம் புரியில் நடந்தது. இதில் தமிழக அணியில் நம்பியூர் குமுதா பள்ளி மாணவ, மாணவியர் இடம் பிடித்தனர். இரு பிரிவிலும் தமிழக அணி வெள்ளி பதக்கம் வென்றது. மாணவர் அணியில் இடம் பிடித்த குமுதா பள்ளி மாணவன் சந்தோஷ், மாணவியர் பிரிவில் இடம் பிடித்த ஐஸ்வர்யா, யோகிஸ்ரீக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.
தேசிய அளவில் சாதனை படைத்த மூவரையும், பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி, செயலர் அரவிந்தன், இணை செயலர் மாலினி, விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி, ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.