ADDED : மார் 13, 2024 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம்பியூர்:பா.ஜ.,வை
சேர்ந்த நடிகை குஷ்பு, தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமைத்தொகையை
பிச்சை என்று கூறியதை கண்டித்து, நம்பியூர் ஒன்றிய தி.மு.க., சார்பில்,
நம்பியூர் பஸ் ஸ்டாண்ட் முன், அவரது உருவ பொம்மையை நேற்று எரித்து
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நம்பியூர் தி.மு.க., ஒன்றிய செயலாளர்
செந்தில்குமார் தலைமையில், நிர்வாகிகள் கீதாமுரளி, அல்லாபிச்சை,
வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் டி.என்.பாளையத்தில்
அண்ணாதுரை சிலை முன், ஒன்றிய தி.மு.க., செயலாளர் சிவபாலன் தலைமையில்
தி.மு.க.,வினர், குஷ்பு உருவ பொம்மையை எரித்தனர்.

