ADDED : மே 02, 2024 12:12 PM
ஈரோடு: ஈரோடு, காளை மாட்டு சிலை அருகே தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, வி.சி.க., தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் டூவீலர் பேரணி நடந்தது.
திருமா ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட செயலர் கமலநாதன் முன்னிலை வகித்தார். பேரணியாக சென்றவர்கள், ரயில்வே ஸ்டேஷன், அரசு மருத்துவமனை ரவுண்டானா வழியாக பி.எஸ்.பார்க் வந்தனர். அங்குள்ள அம்பேத்கர் உட்பட பல்வேறு சிலைகளுக்கு மாலை அணிவித்து பேரணியை நிறைவு செய்தனர். தொழிலாளர் தின சமத்துவ உறுதிமொழி ஏற்றனர்.
* இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சத்தியமங்கலம் அலுவலகத்தில் மே தின கொடியேற்றும் விழாt ஏ.ஐ.டி.யூ.சி.,தொழிற்சங்க தலைவர் ஸ்டாலின் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்திய தேசிய மாதர் சம்மேளன தலைவர் மல்லிகா வாசு கொடியேற்றி வைத்தார். திருப்பூர் குணா மே தினம் குறித்து உரையாற்றினார்.
மாவட்ட செயலர் மோகன் குமார், சத்தியமங்கலம் நகர செயலர் ஜமேஷ், சத்தியமங்கலம் வடக்கு, தெற்கு ஒன்றிய செயலர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதே போல் கடம்பூர், தாளவாடி, ஆசனுார் பகுதிகளிலும் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது.
* ஈரோடு மாவட்ட காங்., கமிட்டி அலுவலகத்தில், அரசு போக்குவரத்து கழக பேரவை பொருளாளர் மற்றும் ஐ.என்.டி.யு.சி., மாவட்ட கவுன்சில் தலைவர் துரைசாமி தலைமையில் மே தின நிகழ்ச்சி நடந்தது. மண்டல நிர்வாக தலைவர் ரவி, கட்டுமான தொழிலாளர் சங்கம் ராமசாமி, சிவா, குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் துணை மேயர் பாபு, தொழிற்சங்க கொடியேற்றினார். மாவட்ட நெசவாளர் அணி தலைவர் மாரிமுத்து இனிப்பு வழங்கினார். ஈரோடு மாவட்ட பொது தொழிலாளர் மத்திய சங்கம் சார்பில் மே தின விழா நடந்தது. பொதுச் செயலாளர் ஆறுமுகம், உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.
கொங்காலம்மன் கோவில் பகுதி, ஸ்வஸ்திக் கார்னர், மத்திய பஸ் ஸ்டாண்ட் உட்பட பல்வேறு பகுதியில் உள்ள தொழிலாளர்கள் மே தின உறுதி மொழி ஏற்றனர்.நிர்வாகிகள் அய்யன்துரை, இணை செயலாளர் கிருபாகரன், பொருளாளர் சசிகுமார், நடராஜ், சதாசிவம், மோகனசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.

