ADDED : டிச 20, 2024 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமையில், மாவட்ட தொழிலாளர் துறை துணை ஆய்வர்கள், முத்திரை ஆய்வர்கள், தொழிலாளர் உதவி ஆய்வர்கள், மாவட்ட நுகர்வோர் அமைப்புகளுடனான காலாண்டு கூட்டம் நடந்தது.
மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையம், கோபி நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள் பங்கேற்றன. எடையளவு, மின்னணு தராசுகள் முத்திரையின்றி பயன்படுத்துவது, பொட்டல பொருட்கள் அதிகபட்ச சில்லறை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தண்டனைக்குரியது என தெரிவிக்கப்பட்டது. அவ்வாறான முரண்பாடுகள் கண்டறியப்பட்டால் அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.