/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் சாக்கடையில் மூழ்கி தொழிலாளி பலி
/
ஈரோட்டில் சாக்கடையில் மூழ்கி தொழிலாளி பலி
ADDED : நவ 04, 2024 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, ஸ்டோனி பாலம் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை, 47; மனைவியை பிரிந்து அப்பகுதி மீன் மார்க்கெட்டில் தொழிலாளி-யாக வேலை பார்த்து வந்தார். ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முன்-புற சாக்கடையில், தங்கதுரை நேற்று காலை சடலமாக கிடந்தார்.
சூரம்பட்டி போலீசார் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவம-னைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், ரயில்வே ஸ்டேஷன் முன் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு வந்துள்ளார். அப்போது கனமழை பெய்ததால், நிலைதடுமாறி சாக்கடையில் விழுந்து, மூழ்கி இறந்தது தெரிய வந்தது.