/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திறந்தவெளி மது பாராக மாறிய லட்சுமி நகர் பைபாஸ் சாலை
/
திறந்தவெளி மது பாராக மாறிய லட்சுமி நகர் பைபாஸ் சாலை
திறந்தவெளி மது பாராக மாறிய லட்சுமி நகர் பைபாஸ் சாலை
திறந்தவெளி மது பாராக மாறிய லட்சுமி நகர் பைபாஸ் சாலை
ADDED : ஜூன் 13, 2025 01:26 AM
பவானி, பவானி அருகே ஒப்புளி மில்லில் இருந்து லட்சுமி நகர் பைபாஸ் பாலம் வரையிலான துாரத்தை, கடந்த சில நாட்களாக மாலை, 6:00 மணி முதல் நள்ளிரவு, 11:00 மணி வரை, வாகன ஓட்டிகள் கடந்து செல்வது அச்சுறுத்தலாகி உள்ளது.
சாலையின் இருபுறமும் குடிகாரர்கள் அமர்ந்து மது குடிக்கின்றனர். சாலைகளில் அமைத்துள்ள திட்டு அவர்களுக்கு வசதியாகி விட்டது. போதை தலைக்கேறியதும் தகாத வார்த்தை பேசி திரிகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள், குறிப்பாக வேலை முடிந்து வீடு திரும்பும் பெண்கள், அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளது.
பவானி, சித்தோடு போலீசார் இந்த சமயங்களில் ரோந்து சென்றால், குடிகாரர்களின் அட்டூழியம் கட்டுக்குள் வரும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது. மக்களின் நண்பன் காவல்துறை என்ற சொலவடையை, போலீசார் காப்பாற்றுவார்கள் என நம்புவோம்.