ADDED : அக் 26, 2026 05:44 AM
அ நிறம் | அளவு
ஈரோடு,:நீலகிரி
மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு
வருகிறது. இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,
ஈரோடு தீயணைப்பு துறை சார்பில் மீட்பு பணிகளை மேற்கொள்ள, ஒரு தீயணைப்பு
வாகனமும், 10 தீயணைப்பு வீரர்களும் ஊட்டிக்கு சென்றுள்ளனர். மீட்பு பணிகள்
தொடரும் பட்சத்தில், குறிப்பிட்ட நாட்களுக்கு பின், மற்றொரு குழுவினர்
ஊட்டிக்கு செல்வர்.
