ADDED : அக் 26, 2026 05:44 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் அருகே, சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் பொது மக்கள் அவதிப்படுகின்றனர்.
சத்தியமங்கலம்
தாலுகா, இக்கரை நெகமம் பஞ்.,க்கு உட்பட்ட திருவள்ளுவர் நகரில் கடந்த
இரண்டு நாட்களாக பெய்த மழையால், மழை நீர் சாலையின் நடுவில் குளம் போல்
தேங்கி நிற்கிறது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், நடந்து
செல்லும் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பஞ்., நிர்வாகம்
நடவடிக்கை மேற்கொண்டு, குண்டும் குழியுமாக உள்ள சாலையை செப்பனிட
வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.
