/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நஞ்சை ஊத்துக்குளி கால்வாயில் மண் சரிவு
/
நஞ்சை ஊத்துக்குளி கால்வாயில் மண் சரிவு
ADDED : அக் 16, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து, நஞ்சை ஊத்துக்குளி வரை பாசன கால்வாய் பிரிந்து செல்கிறது. இந்த கால்வாயின் மூலம், 2,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இந்நிலையில், சென்னிமலை சாலையில் இருந்து முத்தம்பாளையம் பகுதிக்கு வரும் சாலையை ஒட்டி, நஞ்சை ஊத்துக்குளி கால்வாய் செல்கிறது.
இதன் ஒரு பகுதியில் மண்சரிவு ஏற்பட துவங்கியுள்ளது. மேலும் அப்பகுதியில் தடுப்பு கம்பிகள், சுவர்கள் இல்லாததால் இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.