ADDED : ஜூன் 20, 2026 05:59 AM
அ நிறம் | அளவு
பெருந்துறை:பெருந்துறை,
வாய்க்கால் மேடு பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், தனியார்
இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்கள் எட்டு தங்கியுள்ளனர். நேற்று
முன்தினம் இரவு துாங்குவதற்காக மொட்டை மாடிக்கு சென்று விட்டனர்.
நேற்று
காலை அறைகளை திறந்து பார்த்தபோது, அறைகளில் வைக்கப்பட்டிருந்த
ஐந்து லேப்டாப், ஆறு செல்போன் திருட்டு போனது தெரிய வந்தது.
புகாரின்படி பெருந்துறை போலீசார், களவாணிகளை தேடி வருகின்றனர்.
