/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கடந்த மாதம ்தொழிலாளர் துறை ஆய்வில் 48 கடைகள் மீது வழக்கு
/
கடந்த மாதம ்தொழிலாளர் துறை ஆய்வில் 48 கடைகள் மீது வழக்கு
கடந்த மாதம ்தொழிலாளர் துறை ஆய்வில் 48 கடைகள் மீது வழக்கு
கடந்த மாதம ்தொழிலாளர் துறை ஆய்வில் 48 கடைகள் மீது வழக்கு
ADDED : டிச 05, 2024 07:28 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தலைமையில், தொழிலாளர் ஆய்வர்கள், உதவி ஆய்வர்கள் கடந்த நவம்பரில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஈரோடு மாவட்ட எல்லைக்குள், எடையளவுகள், தயாரிப்பாளர், விற்பனையாளர், பழுதுபார்ப்பவர்
நிறுவனங்கள் என, 108 கடைகள், நிறுவனங்களில் நடந்த ஆய்வில், 31 கடைகளில் முரண்பாடுகள்
கண்டறியப்பட்டது. பொட்டல பொருட்கள் சட்ட விதிப்படி, தியேட்டர்கள், மால், பஸ் ஸ்டாண்ட் கடைகள்,
தாபாக்கள், மோட்டல்கள், தண்ணீர் பாட்டில் உற்பத்தி போன்ற இடங்களில் நடந்த ஆய்வில், நான்கு கடைகளில்
முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. குழந்தை தொழிலாளர்கள், வளரிளம் பருவ தொழிலாளர்கள் பணி
செய்கிறார்களா என்பது தொடர்பாக, 167 இடங்களில் நடந்த ஆய்வில் எவரும் கண்டறியப்படவில்லை.
குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி, 67 நிறுவனங்களில் நடந்த ஆய்வில், 13ல், குறைபாடுகள் கண்றியப்பட்டு,
தொழிலாளர் இணை ஆணையர் முன்னிலையில் கேட்பு மனு தாக்கல் செய்யப்-பட்டது. குறைபாடுகள்
கண்றியப்பட்ட, 48 நிறுவனங்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.எடையளவு, மின்னணு தராசுகளை
முத்திரையின்றி பயன்படுத்தக்கூடாது. பொட்டல பொருட்கள் அதிகப்பட்ச சில்லறை விலையை விட,
கூடுதல் விலையில் விற்-கக்கூடாது. குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். 14 வய-துக்கு உட்பட்ட
குழந்தைகள், 15 முதல், 18 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்துவது குற்றம்.
அவ்-வாறு செய்தது கண்டறியப்பட்டால், நிறுவன உரிமையாளர் மீது, 20 ஆயிரம் முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை
அபராதம், 6 மாதம் முதல், 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க நேரிடும்.
குழந்தை தொழிலாளர் பணிபுரிவது கண்டறிந்தால், 1098, 155214 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்-கலாம்.