/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கடந்தாண்டு மாவட்டத்தில் 1,091 தீ விபத்து
/
கடந்தாண்டு மாவட்டத்தில் 1,091 தீ விபத்து
ADDED : ஜன 05, 2024 10:57 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்தாண்டு 1,091 தீ விபத்துகள் ஏற்பட்டதாக மாவட்ட தீயணைப்பு அலுவலர் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கொடுமுடி, மொடக்குறிச்சி, சென்னிமலை, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம், ஆசனுார், நம்பியூர் என, 11 இடங்களில் தீயணைப்பு நிலையம் செயல்படுகிறது. கடந்தாண்டு மாவட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் மீட்பு நடவடிக்கை குறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கூறியதாவது:
சிறு தீ விபத்துகள் 1,087, நடுத்தர தீ விபத்து 4 என, 1,091 தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பெரிய தீ விபத்துகள் ஏதும் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்துகளால் உயிரிழப்பு ஏதுமில்லை. ஆனால், 2 கோடி ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது. புற்கள், குடிசை வீடுகள், மில்களில் அதிக தீ விபத்து ஏற்பட்டது. மின் கசிவு, அணைக்கபடாத புகை வஸ்துகளே விபத்துக்கு பெரிதும் காரணமாக அமைந்தது. பாம்பு பிடிக்க, 3,௦௦௦ அழைப்புகளுக்கு தீயணைப்பு வீரர்கள் சென்றனர். கிணறு, ஆறுகளில் விழுந்த, 60 பேர் மீட்கப்பட்டனர். நீர் நிலைகளில் இருந்து, 50 உடல் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. வீட்டு விலங்குகளை காப்பாற்ற, 400 அழைப்புகள் வந்தன. இவ்வாறு அவர் கூறினார்.