/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை வாகன சேவை துவக்கம்
/
நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை வாகன சேவை துவக்கம்
நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை வாகன சேவை துவக்கம்
நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை வாகன சேவை துவக்கம்
ADDED : செப் 07, 2024 07:54 AM
ஈரோடு: கால்நடை பராமரிப்பு துறை, ஊரக வளர்ச்சி துறை சார்பில், நட-மாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை வாகனம் மற்றும் அலுவலர் பயன்பாட்டுக்காக, 21 வாகன சேவை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். வாகன சேவையை துவக்கி வைத்து, அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: கால்நடை துறை சார்பில், 7 நடமாடும் வாகனங்கள் செயல்பாடு துவக்கி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும், ஒரு வாகனத்-துக்கு ஒரு மாதத்துக்கு, 1 லட்சத்து, 83,000 ரூபாய் வரை செல-வாகும். இப்பயன் முழுவதும் விவசாயிகளை சென்றடையும். 7 வாகனங்களுக்கும் சேர்த்து, 11.47 லட்சம் ரூபாய் மாதம் தோறும் செலவிடப்படுகிறது. கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்குதல், குடற்புழு நீக்கம், தடுப்பூசி போடுதல், மருந்து வழங்கல், ஆண்மை நீக்கம், மலடு நீக்க சிகிச்சை, செயற்கை முறை கரு-வூட்டல், சினை பரிசோதனை, நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்-வுக்கான நடவடிக்கைகள் வழங்குவதற்காக இந்த வசதி செய்யப்-பட்டுள்ளது.
இந்த ஊர்தியில் ஒரு கால்நடை உதவி மருத்துவர், 1 கால்நடை உதவியாளர், 1 ஓட்டுனர் பணியில் இருப்பார்கள். இந்த ஊர்தி திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை, 8:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை ஒதுக்கீடு செய்யப்படும் கிராமங்களில் சிகிச்சை பணி செய்வார்கள்.மதியம், 2:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை, 1962 அவசர அழைப்பு மையம் மூலம் பெறப்படும் அழைப்புகளுக்கு மட்டும் சிகிச்சை வழங்குவார்கள். ஞாயிறு அன்று மதியம், 2:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை, 1962 என்ற அழைப்பு மையம் மூலம் பெறப்படும் அவசர சிகிச்சை பணிகளை மட்டும் மேற்கொள்வார்கள். இவ்வாறு கூறினார்.