/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு முழுமை திட்டத்துக்கு இணையதள சேவை துவக்கம்
/
ஈரோடு முழுமை திட்டத்துக்கு இணையதள சேவை துவக்கம்
ADDED : பிப் 18, 2024 10:21 AM
ஈரோடு: ஈரோடு, 46 புதுாரில் புதிதாக கட்டி திறக்கப்பட்ட இணை ஆணையர் (விற்பனை வரி) ஒருங்கிணைந்த வணிக வரி அலுவலக கட்டட வளாகத்தில், 'ஈரோடு முழுமை திட்ட ஆட்சேபனை மற்றும் ஆலோசனை' பெறுவதற்கான இணைய தள சேவை துவக்க நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். இணைய தள சேவையை துவக்கி வைத்து, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேசியதாவது:
இந்த சேவை, எதிர்கால வளர்ச்சிக்கு வழிகாட்டும் மாற்றங்களை உள்ளடக்கிய நீண்ட கால திட்டமிடலுக்கான சட்டப்பூர்வ ஆவணமாக அமையும்.
கடந்த, 1991-2021ம் ஆண்டுக்கான ஈரோடு முழுமை திட்டமானது, 80.07 சதுர கிலோ மீட்டர் சுற்றளவுக்கு, ஒரு மாநகராட்சி மற்றும் 14 வருவாய் கிராமங்கள் உள்ளடக்கி நடைமுறையில் உள்ளது. தற்போது, 2021-2041ம் ஆண்டுக்கான முழுமை திட்டம், 731 சதுர கிலோ மீட்டர் சுற்றளவுக்கு, ஒரு மாநகராட்சி, 109 வருவாய் கிராமங்களாக விரிவாக்கம் செய்யப்பட்டு, அரசால் இணக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மக்களின் ஆட்சேபனை, ஆலோசனை பெற நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக, erodemasterplan@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் https://erodedtcp.in என்ற வலைதளம் மூலம் ErodeLPA என்ற பேஸ்புக், erode-_lpa என்ற இன்ஸ்டாகிராம் அடையாள பெயர்களில் எழுத்துப்பூர்வ அல்லது க்யூ.ஆர்., கோடு மூலம், இரண்டு மாத காலத்துக்குள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.