/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பூங்கா பராமரிப்பு அறக்கட்டளைக்கு புல் வெட்டும் கருவி வழங்கும் விழா
/
பூங்கா பராமரிப்பு அறக்கட்டளைக்கு புல் வெட்டும் கருவி வழங்கும் விழா
பூங்கா பராமரிப்பு அறக்கட்டளைக்கு புல் வெட்டும் கருவி வழங்கும் விழா
பூங்கா பராமரிப்பு அறக்கட்டளைக்கு புல் வெட்டும் கருவி வழங்கும் விழா
ADDED : டிச 14, 2024 01:39 AM
ஈரோடு, டிச. ௧௪-
ஈரோடு பெரியார் நகர் பூங்காவில், பூங்கா ஊழியர்களை கவுரவிக்கும் விழாவும், மாநகராட்சிக்கு புல் வெட்டும் கருவிகள் வழங்கும் விழாவும் நடந்தது. அறக்கட்டளை துணை தலைவர் சுப்பிரமணியன் வரவேற்றார். அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மயிலானந்தன் பேசினார். சிறப்பு விருந்தினர்களாக மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் பங்கேற்றனர். பூங்கா கமிட்டி மூலம் பூங்கா ஊழியர்களுக்கு சிறப்பு பரிசு தொகை வழங்கினர்.
அறக்கட்டளை நன்கொடையாக ஐந்து புல் வெட்டும் கருவிகளை, மாநகராட்சி மூன்றாவது மண்டல உதவி ஆணையர் கார்த்திகேயனிடம், மயிலானந்தன் வழங்கினார். நிகழ்வில் அறக்கட்டளை பொருளாளர் சந்திரசேகர், செயலாளர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.