/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சட்டம் படிக்கும் மகனை தாக்கியதாக சித்தோடு எஸ்.ஐ., மீது வக்கீல் புகார்

ADDED : ஆக 19, 2025 03:00 AM
ஈரோடு, நசியனுார், நமச்சிலாமடை, பள்ளத்துார் மேற்கு காலனியை சேர்ந்த மூர்த்தி மனைவி வக்கீல் சிவகாமி. இவர், ஈரோடு எஸ்.பி., சுஜாதாவிடம் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
என் மகன் சபரி பூர்வஜன், சென்னை சட்ட கல்லுாரி மூன்றாமாண்டு மாண வன். கடந்த, 16ம் தேதி காலை உறவினரான கவினுடன், நசியனுார் பைபாஸ் அருகே போனில் பேசி கொண்டிருந்தார்.
அப்போது மஹிந்திரா வாகனத்தில் வந்த சித்தோடு எஸ்.ஐ., பன்னீர் செல்வம், போதை மாத்திரை வாங்க வந்தாயா? என கேட்டு, மகனின் கையை பிடித்து முறுக்கி அடித்தார். ஜாதி பெயரை கூறியும், தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மக்கள் கூடியதால் சென்று விட்டார். ஈரோடு அரசு மருத்துவமனையில் என் மகன் சிகிச்சைக்கு சேர்ந்தார். இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். தற்போது என் மகனை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யும்படி, மருத்துவ ஊழியர்களை போலீசார் வற்புறுத்துகின்றனர். எஸ்.ஐ., மீது உரிய நடவடிக்கை சட்டப்படி எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். அதேசமயம் இதை பொய் புகார் என்று, எஸ்.ஐ., பன்னீர்செல்வம் மறுத்துள்ளார்.