/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பண்ணாரி கோவில் அருகே சிறுத்தை, யானை உலா
/
பண்ணாரி கோவில் அருகே சிறுத்தை, யானை உலா
ADDED : மார் 24, 2025 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள, பண்ணாரி கோவில் அருகேயுள்ள வனப்பகுதியில் சாலையோரம் நேற்று முன்தினம் மாலை சிறுத்தை படுத்திருந்தது.
அப்போது அந்த வழியாக பஸ்சில் சென்றவர்கள் பஸ்சை நிறுத்தி வீடியோ எடுத்தனர். சிறிது நேரத்தில் சிறுத்தை எழுந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதேபோல் பண்ணாரி செல்லும் வழியில் ஒற்றை யானை சாலையோரம் தண்ணீர் தேடி அலைந்தது. கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், வன விலங்குகள் தண்ணீர் தேடி இடம்பெயர்வது அதிகரித்துள்ளது. வாகன ஓட்டிகள், மக்கள் வனப்பகுதி வழியாக செல்லும்போது எச்சரிக்கையுடன் செல்ல வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.