/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பண்ணாரி கோவில் அருகே சிறுத்தை நடமாட்டம்
/
பண்ணாரி கோவில் அருகே சிறுத்தை நடமாட்டம்
ADDED : அக் 27, 2024 01:32 AM
பண்ணாரி கோவில் அருகே
சிறுத்தை நடமாட்டம்
சத்தியமங்கலம், அக். 27-
சத்தியமங்கலம் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை, அமாவாசை, விசேஷ நாட்களில் வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். நேற்று முன்தினம் கோவில் அருகே உள்ள பாலத்தின் அருகில், சாலையோரம் ஒரு சிறுத்தை நடமாடியது. அப்போது வாகனத்தில் சென்ற சிலர் பீதியடைந்து வேகமாக சென்று விட்டனர்.
ஒரு சிலர் துாரமாக சென்று வாகனத்தை நிறுத்தி போட்டோ எடுத்துள்ளனர். அதே பகுதியில் சிறிது நேரம் உலா வந்த சிறுத்தை, சிறிது நேரத்தில் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. கோவில் அருகே சிறுத்தை நடமாடியதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.