/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
செயற்கை இழை பஞ்சு நுாலின் மீதான தரக்கட்டுப்பாட்டு ஆணையை நிறுத்த கடிதம்
/
செயற்கை இழை பஞ்சு நுாலின் மீதான தரக்கட்டுப்பாட்டு ஆணையை நிறுத்த கடிதம்
செயற்கை இழை பஞ்சு நுாலின் மீதான தரக்கட்டுப்பாட்டு ஆணையை நிறுத்த கடிதம்
செயற்கை இழை பஞ்சு நுாலின் மீதான தரக்கட்டுப்பாட்டு ஆணையை நிறுத்த கடிதம்
ADDED : நவ 04, 2024 05:02 AM
ஈரோடு: செயற்கை இழை விஸ்காஸ் பஞ்சு நுாலின் மீதான தர கட்டுப்-பாட்டு ஆணையை நிறுத்தி வைக்க, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும்படி, ஈரோடு பகுதி விசைத்தறியாளர் சார்பில், தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனுவில் கூறியதாவது:
இந்திய ஜவுளி துறையில், பருத்திக்கு அடுத்தபடியாக செயற்கை இழை பஞ்சுகளான பாலியஸ்டர், ரயான் எனப்படும் விஸ்கோஸ் அதிகமாக உற்பத்தியாகிறது. தமிழகத்தில் மட்டும், 70க்கும் மேற்-பட்ட நுாற்பாலைகளில் இந்த நுால் தறிகளில் பயன்படுத்தப்படு-கிறது. இதனால் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தறிகள், பருத்தி துணி நெய்வதில் இருந்து, செயற்கை இழை பஞ்சு சார்ந்த துணி உற்பத்திக்கு மாறியுள்ளன.விஸ்கோஸ் பஞ்சு நுால் உற்பத்தி இந்தியாவில் குறைவு என்பதால், தேவையான அளவு இறக்குமதி செய்தனர். தவிர, விஸ்கோஸ் பஞ்சு, அதற்கான மூலப்பொருளை இந்தியாவிலேயே வாங்கி, உள்நாட்டில் நுால் உற்பத்தி செய்கின்றனர். இந்நுாலையும், அதிக அளவில் விசைத்த-றியாளர்கள் கொள்முதல் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், இதற்கான மூலப்பொருள், ரயான் பஞ்சு, பாலி-யஸ்டர் பஞ்சு, அதனை சார்ந்த நுால் மீது தர கட்டுப்பாட்டு ஆணையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதனால் பன்-னாட்டு விலைக்கு கிடைத்த மூலப்பொருட்கள், தற்போது கிடைக்கவில்லை. அத்துடன் உள்நாட்டு உற்பத்தி செய்யப்படும் ரயான், பாலியஸ்டர் நுாலின் விலை, தரக்கட்டுப்பாட்டு ஆணை விதிப்படி விலை அதிகமாகிறது. இறக்குமதியாகும் நுால் விலை குறைவாகும்போது, உள்நாட்டு நுால் வாங்குவது பாதிக்கும்.
இருப்பினும், விஸ்கோஸ் நுால் உற்பத்திக்கான மூலப்பொருளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதிலும், இந்த ஆணைப்படி சிரமம் ஏற்படும். அவ்வாறு வாங்கி நுாலை உற்-பத்தி செய்யும்போது, வெளிநாட்டு இறக்குமதி நுாலின் விலை-யைவிட, இங்கு உற்பத்தியாகும் நுாலின் விலை, 10 முதல், 25 சதவீதம் கூடுதலாக காணப்படும்.
உள்நாட்டு உற்பத்தி நுாலையே, இங்குள்ள விசைத்தறியாளர்கள் அதிகம் பயன்படுத்தும் நிலையில், உள்நாட்டு உற்பத்தி நுாலை வாங்காத நிலை அல்லது இறக்குமதியாகும் நுாலை கொள்முதல் செய்யும் நிலை ஏற்படும். இதனால் விசைத்தறியாளர்கள், நுால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கபப்படுவர். உலக வர்த்தக அமைப்பின் வழிகாட்டுதல்படி மத்திய அரசு விஸ்கோஸ் பஞ்சு நுாலின் மீதான தர கட்டுப்பாட்டு ஆணையை அடுத்த, 60 நாட்-களில் முழுமையாக்கும்போது, பல சிரமங்களை நுால் உற்பத்தி-யாளர், நெசவாளர் சந்தித்து, நெசவுத்தொழில் மேலும் பாதிக்கும்.
தற்போது சிங்கப்பூர், ஹாங்காங், இந்தோனேஷியா, நேபாளம், வியாட்நம் போன்ற, 20க்கும் மேற்பட்ட நாடுகள், நமது விசைத்-தறி ஆடைகள், நெட்டிங் ஆடைகளை இறக்குமதி செய்தும், மதிப்பு கூட்டியும், வீட்டு உபயோக ஜவுளி பொருட்களையும் வாங்கி பயன்படுத்துகின்றனர். இந்த ஆர்டரும் பாதிக்கும். எனவே, இத்தரக்கட்டுப்பாட்டு ஆணையை மத்திய அரசு அம-லாக்கக்கூடாது, என தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.