/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆக்கிரமித்த நபருக்கு ஆதரவாக தாசில்தார் நடவடிக்கை கோரி முதல்வருக்கு 'லெட்டர்'

ADDED : ஆக 27, 2025 01:14 AM
அந்தியூர், அந்தியூர் அருகே பொய்யேரிக்கரையிலிருந்து சுடுகாட்டுக்கு செல்லும் வழிப்பாதையை, அதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஆக்கிரமித்து, கிணறு வெட்டி விவசாயம் செய்கிறார். ஆக்கிரமிப்பை அகற்ற அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டம் நடத்தினர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மூன்றாண்டுகளுக்கு முன்பே ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகும் அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்றாமல் வருவாய் துறையினர் காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் முதல்வர், தலைமை செயலர், வருவாய் துறை செயலர், ஈரோடு கலெக்டர் ஆகியோருக்கு, இப்பகுதியை சேர்ந்த, 260 பேர், 'போஸ்ட் கார்டில்' புகார் அனுப்பியுள்ளனர்.
அதன் விபரம்: அந்தியூர் தாலுகா பொய்யேரிக்கரையில் ரி.ச.எண், 906/2ல், அரசு நிலத்தில் கிணறு வெட்டி தனிநபர் ஆக்கிரமித்து விவசாயம் செய்கிறார். ஆக்கிரமிப்பை அகற்றாமல், தனிநபருக்கு ஆதரவாக அந்தியூர் தாசில்தார் கவியரசு செயல்படுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.