/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இல்லங்களில் நுாலகம் மாணவர்களுக்கு புத்தகம்
/
இல்லங்களில் நுாலகம் மாணவர்களுக்கு புத்தகம்
ADDED : ஜூலை 25, 2025 12:50 AM
புன்செய்புளியம்பட்டி, சீர் வாசகர் வட்டத்தின் சார்பில், குழந்தைகளிடையே வாசிக்கும் திறனை மேம்படுத்துவதற்காக, அரசு பள்ளி மாணவர் துணையோடு இல்லங்களில் இளையோர் நுாலகங்களை உருவாக்க, புத்தக துாதுவர் திட்டம் அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி பவானிசாகர் அருகே தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், நுாலக திட்ட தொடக்க விழா நடந்தது. தலைமை ஆசிரியர் (பொ) மகேஸ்வரி தலைமை வகித்தார். சுடர் அமைப்பின் இயக்குனர் நடராஜ், பி.டி.ஏ.,தலைவர் ரங்கராஜ் முன்னிலை வகித்தனர். ஆறாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர், 107 பேருக்கு, கு.அழகிரிசாமி எழுதிய அன்பளிப்பு எனும் நுால், பி.டி.ஏ., சார்பாக அன்பளிப்பாக வழங்கப்பட்டது.