ADDED : டிச 23, 2025 08:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயம் யூனியன் படியூர் பஞ்.,ல் ஊர் புற நுாலகம், நத்தக்-காடையூர் பஞ்.,ல் கிளை நுாலக திறப்பு விழா நேற்று காலை நடந்தது. முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சியில் திறந்து வைத்தார்.
நுாலகத்தில் நடந்த நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் குத்து விளக்கேற்றினார். இரு இடங்-களிலும் தலா, 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நுாலகம் கட்டப்-பட்டுள்ளது. நிகழ்வில் திருப்பூர் மாவட்ட நுாலக அலுவலர் ராஜன், மாநகராட்சி நான்காம் மண்டல தலைவர் இல.பத்ம-நாபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

