/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பூம்புகாரில் விளக்குகள் கண்காட்சி துவக்கம்
/
பூம்புகாரில் விளக்குகள் கண்காட்சி துவக்கம்
ADDED : நவ 18, 2025 01:49 AM
ஈரோடு, கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, ஈரோடு மேட்டூர் சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில், விளக்குகள் கண்காட்சி விற்பனை நேற்று துவங்கியது.
இதுகுறித்து மேலாளர் சேவியர் கூறியதாவது:
வீடுகள், கோவில்கள், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் பயன்படுத்தும் வகையில், பூம்புகார் உற்பத்தி நிலையங்களான நாச்சியார்கோவில், மதுரை, வாகைக்குளம் ஆகிய இடங்களில் தயாரிக்கப்பட்ட உயரமான பித்தளை, 4 அங்குலம் முதல், 6 அடி வரையிலான அன்னம் குத்து விளக்குகள், கிளை விளக்குகள், கிளி விளக்குகள், மங்கள தீபம், மலபார் விளக்குகள், துாண்டா விளக்குகள், பாலாடை விளக்குகள், பித்தளை தொங்கு விளக்குகள், சங்கு, சக்கர தொங்கு விளக்குகள் உள்ளன. குறிப்பிட்ட விளக்குகளுக்கு, 10 சதவீத தள்ளுபடி உண்டு. இவ்வாறு கூறினார்.

