ADDED : மே 25, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், காங்கேயம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நகராட்சி பகுதியில் திரு.வி.க., நகரை சேர்ந்த சுரேஷ், 40, என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். இதில், 250 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் ரோடு பஸ் ஸ்டாண்ட் பின்புறம் சந்துக்கடையில் மது விற்ற, சிவகங்கை, கள்ளுப்பட்டியை சேர்ந்த அழகப்பன், 28, என்பவரை கைது செய்தனர். அவரிடம், 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.