/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புன்செய்புளியம்பட்டி சந்தையில்ரூ.1 கோடிக்கு கால்நடை விற்பனை
/
புன்செய்புளியம்பட்டி சந்தையில்ரூ.1 கோடிக்கு கால்நடை விற்பனை
புன்செய்புளியம்பட்டி சந்தையில்ரூ.1 கோடிக்கு கால்நடை விற்பனை
புன்செய்புளியம்பட்டி சந்தையில்ரூ.1 கோடிக்கு கால்நடை விற்பனை
ADDED : ஏப் 18, 2025 01:09 AM
புன்செய்புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டி கால்நடை சந்தையில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை, 1 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.
ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது.
நேற்று நடந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டம், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். சந்தைக்கு, 30 எருமை, 250 கலப்பின மாடு, 200 ஜெர்சி மாடு, 80 வளர்ப்பு கன்றுகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். எருமை, 20-42 ஆயிரம் ரூபாய்; கறுப்பு வெள்ளை மாடு, 22-48 ஆயிரம் ரூபாய்; ஜெர்சி மாடு, 23-53 ஆயிரம் ரூபாய்; சிந்து மாடு, 15-40 ஆயிரம் ரூபாய்; நாட்டுமாடு, 45-76 ஆயிரம் ரூபாய்; வளர்ப்பு கன்று, 7,000 ரூபாய் முதல், 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் ஒரு கோடி ரூபாய்க்கு விற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் ஈரோடு, கருங்கல்பாளையத்தில் நேற்று நடந்த சந்தைக்கு, 6,000 முதல், 23,000 ரூபாய்க்குள், 50 மாடு; 23,000 முதல், 70,000 ரூபாய் வரையிலான விலையில், 250 எருமை; 23,000 முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 300 பசு மாடு; கலப்பின மாடுகள், 50க்கும் மேற்பட்டவை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா மாநில வியாபாரிகள், விவசாயிகள், 95 சதவீத கால்நடைகளை வாங்கி
சென்றனர்.