ADDED : ஏப் 07, 2024 03:19 AM
* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாழை ஏலம் நடந்தது. மொத்தம், 318 வாழைத்தார் வரத்தானது. செவ்வாழை தார், 310 ரூபாய், தேன்வாழை, 300 ரூபாய், ரஸ்தாளி, 200 ரூபாய், பூவன், 100 ரூபாய்க்கும் ஏலம் போனது. கதளி கிலோ, 10 ரூபாய், நேந்திரம், 21 ரூபாய்க்கும் ஏலம் போனது.
* சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம்
நடந்தது. நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், 2,522 வாழைத்தார் கொண்டு வந்தனர். கதளி கிலோ-14 ரூபாய், நேந்திரன்-32, பூவன் தார்-510 ரூபாய், ரஸ்தாளி-460, தேன்வாழை- 520, செவ்வாழை-580, ரொபஸ்டா-280, பச்சைநாடன்-360, மொந்தன்-250 ரூபாய்க்கும் விற்பனையானது.
* பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், 4,757 மூட்டைகளில், 2.17 லட்சம் கிலோ கொண்டு வந்தனர். முதல் தரம் ஒரு கிலோ, 87.89 ரூபாய் முதல் 98.70 ரூபாய்; இரண்டாம் தரம், 4௧ ரூபாய் முதல், 92.29 ரூபாய் வரை, 1.98 கோடி ரூபாய்க்கு கொப்பரை வர்த்தகம் நடந்தது.
* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. கதளி ஒரு கிலோ, 18 ரூபாய், நேந்திரன், 26 ரூபாய்க்கும் விற்றது. பூவன் தார், 400 ரூபாய், தேன்வாழை, 410, செவ்வாழை, 600, ரஸ்த்தாளி, 450, ரொபஸ்டா, 250, மொந்தன், 260, பச்சைநாடான், 340 ரூபாய்க்கும் விற்பனையானது. இதேபோல் தேங்காய் ஏலத்தில் ஒரு காய் எட்டு ரூபாய் முதல், 18 ரூபாய் வரை விற்றது.
*சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் ஜாதிமுல்லை ஒரு கிலோ, 600 ரூபாய்க்கு ஏலம் போனது. மல்லிகை-520, முல்லை-510, செண்டுமல்லி-89, கோழிகொண்டை-65, கனகாம்பரம்-580, சம்பங்கி-220, அரளி-180, துளசி-40, செவ்வந்தி-280 ரூபாய்க்கும் விற்பனையானது.
* திருப்பூர் மாவட்டம் முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று எள் ஏலம் நடந்தது. மொத்தம், 4,126 கிலோ வரத்தானது. ஒரு கிலோ, 130.59 ரூபாய் முதல், 146.22 ரூபாய் வரை, 5.77 லட்சம் ரூபாய்க்கு விற்றது. இதேபோல் கொப்பரை ஏலம் நடந்தது. ஏலத்துக்கு, 3,582 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. ஒரு கிலோ அதிகபட்சம், 93.10 ரூபாய், குறைந்தபட்சம், 60.20 ரூபாய்க்கும் ஏலம் போனது.

