ADDED : ஆக 03, 2024 06:52 AM
* ஈரோடு மாவட்டம் கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது.
கதளி ஒரு கிலோ, 50 ரூபாய், நேந்திரன், 42 ரூபாய்க்கும் விற்றது.பூவன் தார், 710, தேன்வாழை, 600, செவ்வாழை, 800, ரஸ்த்தாளி, 580, பச்சைநாடான், 410, ரொபஸ்டா, 330, மொந்தன், 400 ரூபாய்க்கும் விற்பனையானது. தேங்காய் ஏலத்துக்கு, ௮,௭௭௦ காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு காய் எட்டு ரூபாய் முதல், 16 ரூபாய் வரை விற்பனையானது. * சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த எள் ஏலத்துக்கு, 304 மூட்டைகள் வந்தன. கருப்பு ரக எள் கிலோ, 135.09 ரூபாய் முதல், 152.09 ரூபாய்; சிவப்பு ரகம் கிலோ, 9௩ ரூபாய் முதல், 150.80 ரூபாய் வரை, 22,640 கிலோ எள், 29 லட்சத்து, 13,712 ரூபாய்க்கு விற்பனையானது.* புன்செய்புளியம்பட்டி பூ மார்க்கெட்டில் சில நாட்களுக்கு முன் ஒரு கிலோ மல்லிகை பூ, 700 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் நேற்று கிலோ, 1,340 ரூபாய்க்கு விற்றது. இதேபோல் முல்லை பூ கிலோ, 550 ரூபாய், 30 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி கிலோ, 240 ரூபாய்க்கும் விற்றது.* தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த தேங்காய் ஏலத்துக்கு, 2,196 காய்கள் வந்தன. ஒரு காய், 17.10 ரூபாய் முதல், 22.50 ரூபாய் வரை, 34,107 ரூபாய்க்கு ஏலம் போனது.* ஆடிப்பெருக்கு பண்டிகையால், ஈரோட்டில் மொத்த வியாபார பூக்கடைகளில், பூக்களின் விலை நேற்று அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒரு கிலோ, 500 ரூபாய்க்கு விற்ற மல்லிகை, 800 ரூபாயாக உயர்ந்தது. இதேபோல் முல்லை பூ கிலோவுக்கு, 300, சாதிப்பூ, 200, அரளி, 100 ரூபாய் விலை உயர்ந்தது.இதன்படி முல்லை-600, சாதிப்பூ-500, அரளி-150, சாமங்கி-200, செவ்வந்தி-240, கோழிக்கொண்டை-100, கேந்தி-70, ரோஜா-200 ரூபாய்க்கு விலை போனது.