ADDED : மார் 05, 2025 06:15 AM
* சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நடந்தது. மொத்தம், 1,942 வாழைத்தார் வரத்தானது. கதளி ஒரு கிலோ, 56, நேந்திரன், 40, பூவன் தார், 680, ரஸ்தாளி, 640, தேன்வாழை,760, செவ்வாழை,1,360, ரொபஸ்டா, 480, பச்சைநாடன், 460 ரூபாய் என, 4.49 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* சத்தி பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் ஜாதிமுல்லை, 750, ரூபாய்க்கு ஏலம் போனது. மல்லிகை பூ, 315, முல்லை, 600, காக்கடா, 175, செண்டுமல்லி 40, கோழிகொண்டை,75, கனகாம்பரம்,350, சம்பங்கி,50, அரளி,60, துளசி,50, செவ்வந்தி, 160 ரூபாய்க்கும் விற்பனையானது.
* எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 317 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 137 முதல், 150.29 ரூபாய், இரண்டாம் தரம் கிலோ, 102.42 முதல், 144.42 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 12,470 கிலோ எடை கொப்பரை, 16.௯௨ லட்சம் ரூபாய்க்கு விற்றது.
* அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் முருங்கை வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலையும் குறைந்துள்ளது. கடந்த வாரங்களில் கிலோ, 120 ரூபாய் முதல் 140 ரூபாய் வரை விற்ற நிலையில், 90 - 100 ரூபாய்க்கு தற்போது விற்கிறது.