ADDED : செப் 23, 2024 04:23 AM
* திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த நத்தக்காடையூரில், காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை நேற்று நடந்தது. மாடுகள், காளைகள், கிடாரி மற்றும் காளை கன்றுகள் என, 73 கால்நடைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் மாடுகள், 20 ஆயிரம் ரூபாய் முதல், 69 ஆயிரம் ரூபாய்; கிடாரி கன்று, 12 ஆயிரம் ரூபாய் முதல், 40 ஆயிரம் ரூபாய் வரை விற்றது. மொத்தம், 43 கால்நடைகள், 15 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக, சந்தை பொறுப்பாளர் தெரிவித்தார்.
* திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் முருங்கை கொள்முதல் நிலையத்துக்கு, கடந்த வாரம், 11 டன் முருங்கை வரத்தானது. மர முருங்கை கிலோ, 10 ரூபாய், கரும்பு முருங்கை, 17 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று, 5 டன் வரத்தாகி, கரும்பு முருங்கை கிலோ, 50 ரூபாய்க்கு விற்றது.
* ஈரோடு மாவட்டம் அந்தியூர், புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நேற்று ஏலம் நடந்தது. கதளி ரகம் கிலோ, 45 ரூபாய், நேந்திரம், 16 ரூபாய், செவ்வாழை தார், 780 ரூபாய், ரஸ்தாளி தார், 800 ரூபாய், பூவன் தார், 520 ரூபாய், மொந்தன் தார், 350 ரூபாய் என, 3,440 வாழைத்தார் வரத்தாகி, 6 லட்சம் ரூபாய்க்கு விற்றது.