ADDED : அக் 06, 2024 02:56 AM
* ஈரோடு மாவட்டம் பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், 5,187 மூட்டைகளில், ௨.46 லட்சம் கிலோ கொண்டு வந்தனர். முதல் தரம் ஒரு கிலோ, 11௭ ரூபாய் முதல் 134.59 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 40 ரூபாய் முதல் 12௩ ரூபாய் வரை, ௨.௯௦ கோடி ரூபாய்க்கு விற்றது.
* பவானி அருகே மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 52 மூட்டை எள் வரத்தானது. இதில் வெள்ளை ரகம் கிலோ, 102 ரூபாய் முதல் 133 ரூபாய்; கருப்பு ரகம் கிலோ, 115 ரூபாய் முதல் 156 ரூபாய்க்கு விற்றது. 1,273 தேங்காய் வரத்தாகி, ஒரு காய், 11 ரூபாய் முதல் 23 ரூபாய் வரை விற்றது. தேங்காய் பருப்பு, 28 மூட்டை வரத்தாகி, ஒரு கிலோ, 80 ரூபாய் முதல் 122 ரூபாய் வரை ஏலம் போனது. * புன்செய்புளியம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடந்தது. புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதி மற்றும் திருப்பூர், கோவை மாவட்ட கிராமங்களில் இருந்து, 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், 45 கிலோ எடையில், 795 மூட்டை கொண்டு வந்தனர். நிலக்கடலை காய்ந்தது முதல் தரம், 77 ரூபாய் முதல் 79.40 ரூபாய்; இரண்டாம் ரகம், 69 ரூபாய் முதல் 75 ரூபாய் வரை ஏலம் போனது.
* சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 30 கிலோ எடையில், 2,800 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தானது. ஒரு மூட்டை, 1,270 ரூபாய் முதல், 1,370 ரூபாய் வரை விற்பனையானது. உருண்டை வெல்லம், 3,200 மூட்டை வரத்தாகி, ஒரு மூட்டை, 1,380 ரூபாய் முதல், 1,450 ரூபாய்; அச்சு வெல்லம், 450 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,350 ரூபாய் முதல், 1,440 ரூபாய் வரை விற்பனையானது.
* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 8,362 தேங்காய் வந்தது. ஒரு கிலோ, 34.17 ரூபாய் முதல், 43.15 ரூபாய் வரை, 3,838 கிலோ தேங்காய், 1.47 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.