ADDED : அக் 25, 2024 01:01 AM
உள்ளூர் வர்த்தக செய்திகள்
* ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த நிலக்கடலை ஏலத்துக்கு, பச்சை நிலக்கடலை, 33 மூட்டை வரத்தானது. ஒரு கிலோ, 24.21 - 42.51 ரூபாய்; காய்ந்த நிலக்கடலை, 355 மூட்டை வரத்தாகி, ஒரு கிலோ, 65.71 - 75 ரூபாய் என, வரத்தான நிலக்கடலை, 8.29 லட்சம் ரூபாய்க்கு
விற்றது.
இதேபோல் சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 344 மூட்டை நிலக்கடலை வரத்தானது. ஒரு கிலோ, 61.86 ரூபாய் முதல், 74.16 ரூபாய் வரை, 10,997 கிலோ நிலக்கடலை, 7.௦௨ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. ஏலத்தில், கதளி ஒரு கிலோ, 25 ரூபாய், நேந்திரன், 30 ரூபாய்க்கும் விற்றது. பூவன் தார், 460, தேன்வாழை, 500, செவ்வாழை, 810, ரஸ்த்தாளி, 830, பச்சைநாடான், 300, ரொபஸ்டா மற்றும் மொந்தன், தலா 280 ரூபாய்க்கு விற்பனையானது. விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வந்த, 7,720 வாழைத்தார்களும், 10.14 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த தேங்காய் பருப்பு ஏலத்துக்கு, ௬,௪௪௨ கிலோ வரத்தானது. ஒரு கிலோ, 110 ரூபாய் முதல், 123 ரூபாய் வரை வரத்தான அனைத்தும், 7.49 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.