ADDED : நவ 14, 2024 07:36 AM
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்-தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. சுற்று வட்டார பகுதி விவசாயிகள், 5,109 மூட்டைகளில், ௨.௩௪ லட்சம்
கிலோ கொண்டு வந்தனர். இதில் முதல் தரம் கிலோ, 126.89 ரூபாய் முதல், 142.91 ரூபாய்; இரண்டாம் தரம், 31.45 ரூபாய் முதல், 13௬ ரூபாய் வரை, ௨.90 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.* மொடக்குறிச்சி உப ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 9,006 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ, 40.96 ரூபாய் முதல், 50.50 ரூபாய் வரை, 2,983 கிலோ தேங்காய், 1.௩௨ லட்சம் ரூபாய்க்கு
விற்பனையானது. அதுபோல, 53 மூட்டை கொப்பரை ஏலத்துக்கு வந்தது. முதல் தரம் கிலோ, 136.59 ரூபாய் முதல், 140.59 ரூபாய்; இரண்டாம் தரம், 98.69 ரூபாய் முதல், 126.60 ரூபாய் வரை, 1,074 கிலோ கொப்பரை, 1.௩௪ லட்சம்
ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய், கொப்பரை இரண்டும் சேர்ந்து, 2.66 லட்சம் ரூபாய்க்கு விலை போனது.
* சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 191 மூட்டை நிலக்கடலை வந்தது. ஒரு கிலோ நிலக்கடலை, 65.06 ரூபாய் முதல், 75.39 ரூபாய் வரை, 5,828 கிலோ நிலக்க-டலை, 3.௭௦ லட்சம் ரூபாய்க்கு
விற்பனையானது.* அந்தியூர், புதுப்பாளையத்தில் வாழை ஏலம் நடந்தது. கதளி ரகம் கிலோ, 30 ரூபாய், நேந்திரம், கிலோ, 36 ரூபாய், செவ்-வாழை தார், 620 ரூபாய், ரஸ்தாளி தார், 400 ரூபாய், மொந்தன் தார், 230 ரூபாய், பூவன் தார், 240 ரூபாய்
என, 2,980 வாழைத்தார், 6.92 லட்சம் ரூபாய்க்கு விற்றது.* அம்மாபேட்டை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடந்த ஏலத்தில், 2,080 தேங்காய் வரத்தாகி ஒரு காய், 12 முதல் 27 ரூபாய்க்கு விற்றது. 18 மூட்டை நெல் வரத்தாகி, கிலோ, 23 முதல் 27 ரூபாய்; 32
மூட்டை தேங்காய் பருப்பு வரத்-தாகி ஒரு கிலோ, 115 முதல் 130 ரூபாய்; 567 மூட்டை நிலக்க-டலை வரத்தாகி கிலோ, 65 முதல் 72 ரூபாய்; 13 மூட்டை எள் வரத்தாகி கிலோ, 100 முதல் 112 ரூபாய்; 45 மூட்டை மக்காச்-சோளம்
வரத்தாகி கிலோ, 24 ரூபாய்க்கும் விற்றது.