ADDED : பிப் 04, 2024 10:27 AM
* ஈரோடு மாவட்டம் பெருந்துறை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று, கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது. மொத்தம், 4,476 மூட்டை வரத்தானது. முதல் தரம் கிலோ, 80.79 ரூபாய் முதல், 93 ரூபாய்; இரண்டாம் தரம், 2௭ ரூபாய் முதல் 8௬ ரூபாய் வரை, 2.௦௯ லட்சம் கிலோ கொப்பரை, 1.80 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.
* புன்செய்புளியம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நிலக்கடலை ஏலம் நடந்தது. இதில், 45 கிலோ எடையில், 122 மூட்டை நிலக்கடலை வரத்தானது. காய்ந்தது முதல் தரம், 68 ரூபாய் முதல், 71.70 ரூபாய்; இரண்டாம் ரகம், 66 ரூபாய் முதல் 68 ரூபாய் வரை ஏலம் போனது. மொத்தம், 3.10 லட்ச ரூபாய்க்கு விற்பனையானது. பொள்ளாச்சி, உடுமலை பகுதி வியாபாரிகள் ஏலம் எடுத்தனர்.
* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 13,177 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ தேங்காய், 24.39 ரூபாய் முதல், 27.39 ரூபாய் வரை, 5,575 கிலோ தேங்காய், 1.39 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* பவானி அருகே மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வேளாண் விளைபொருட்கள் ஏலம் நேற்று நடந்தது. ஏலத்தில், 37 மூட்டை எள் வரத்தாகி, வெள்ளை ரகம் கிலோ, 137 ரூபாய் முதல் 180 ரூபாய்; சிவப்பு ரகம், 145 ரூபாய்; கறுப்பு ரகம், 160 ரூபாய்க்கும் விற்றது. 162 தேங்காய் வரத்தாகி, ஒரு காய் ரூபாய்க்கு விற்றது. ஐந்து மூட்டை தேங்காய் பருப்பு வரத்தாகி ஒரு கிலோ, 58 ரூபாய் முதல் 8௫ ரூபாய் வரை விற்றது.
* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. கதளி ஒரு கிலோ, 20 ரூபாய், நேந்திரன், 16 ரூபாய்க்கும் விற்றது. பூவன் தார், 340 ரூபாய்க்கும், தேன்வாழை, 400, செவ்வாழை, 790, ரஸ்த்தாளி, 410, பச்சைநாடான், 250, ரொபஸ்டா, 200, மொந்தன், 180 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 5,650 வாழைத்தார்களும், 6.63 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் ஏலத்தில் ஒரு காய் எட்டு ரூபாய் முதல், 17 ரூபாய் வரை விற்பனையானது.