ADDED : பிப் 18, 2024 10:27 AM
* ஈரோடு மாவட்டம் கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. கதளி மற்றும் நேந்திரன் கிலோ, தலா, 20 ரூபாய்க்கு விற்றது. பூவன், 400, தேன்வாழை, 510, செவ்வாழை, 800, பச்சைநாடான், 310, ரொபஸ்டா, 280, மொந்தன், 240, ரஸ்த்தாளி, 450 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 6,050 வாழைத்தார்களும், 9.52 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் ஏலத்தில், ஒரு காய் குறைந்தபட்சம், ஏழு ரூபாய்க்கும், அதிகபட்சம், 18 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 10 ஆயிரத்து 870 தேங்காய்களும், 1.10 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* பவானி அருகே மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 76 மூட்டை எள் வரத்தானது. வெள்ளை ரகம் கிலோ, 149 ரூபாய் முதல் 184 ரூபாய்; சிவப்பு ரகம், 154 ரூபாய் முதல் 164 ரூபாய்க்கு விற்றது. தேங்காய் ஏலத்துக்கு, ௬௦௦ காய்கள் வரத்தாகி, ஒரு காய் ஒன்று ஒன்பது ரூபாய் முதல், 11 ரூபாய்; இரண்டு மூட்டை தேங்காய் பருப்பு வரத்தாகி கிலோ, 72 ரூபாய் முதல் 86 ரூபாய்; மூன்று மூட்டை பச்சை பயிறு வரத்தாகி கிலோ, 113 ரூபாய் முதல், 121 ரூபாய்; ஒரு மூட்டை நரிப்பயறு வரத்தாகி கிலோ, 91 ரூபாய்க்கும் விற்றது.
* பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 2,956 மூட்டைகளில், 1.38 லட்சம் கிலோ வரத்தானது. முதல் தரம் ஒரு கிலோ, 65.69 ரூபாய் முதல் 87.05 ரூபாய்; இரண்டாம் தரம் ஒரு கிலோ, 20 ரூபாய் முதல், 80.16 ரூபாய் வரை, 1.09 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
* திருப்பூர் மாவட்டம் முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 2,334 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. ஒரு கிலோ அதிகபட்சம், 81.15 ரூபாய்; குறைந்தபட்சம், 58.15 ரூபாய்க்கம் விற்றது.