ADDED : ஜூன் 24, 2025 02:00 AM
* ஈரோடு மாவட்டம் அந்தியூரில் வெற்றிலை சந்தை நேற்று நடந்தது. மொத்தம், 85 கூடை வெற்றிலை வரத்தானது. ராசி வெற்றிலை சிறியது ஒரு கட்டு, 15 ரூபாய், பெரியது, 55 ரூபாய் முதல் 60; பீடா வெற்றிலை கட்டு, 35 முதல் 40 ரூபாய், செங்காம்பு வெற்றிலை கட்டு, 5 முதல் 15க்கும் விற்பனையானது.
* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடப்பாண்டு பருத்தி ஏலம் நேற்று தொடங்கியது. எம்.எல்.ஏ., வெங்கடாசலம் தொடங்கி வைத்தார். ஏலத்துக்கு, 351 மூட்டைகளில், 10 டன் பருத்தி வரத்தானது. ஒரு கிலோ, 68.49 ரூபாய் முதல், 75.69 ரூபாய் வரை, 7.50 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
* எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 79,269 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 58.65 முதல், 71.89 ரூபாய் வரை, 31,238 கிலோ தேங்காய், 19.97 லட்சம் விலை போனது.
* கோபி தாலுகா சிறுவலுார் அருகே பதிப்பாளையம் கருப்பட்டி உற்பத்தியாளர்
சங்கத்தில், கருப்பட்டி ஏலம் நேற்று நடந்தது. தென்
னங்கருப்பட்டி, 500 கிலோ வரத்ததாகி, கிலோ 110 ரூபாய்க்கு விற்பனையானது. வரத்தான அனைத்து கருப்பட்டியும், 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், விலையேற்றம், இறக்கமின்றி, தென்னங்கருப்பட்டி அதே பழைய விலைக்கே விற்பனையானது.
* அந்தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், எள் ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 60 மூட்டை வரத்தானது. வெள்ளை எள் கிலோ, 95 முதல் 114 ரூபாய்; சிவப்பு எள் கிலோ, 74-105 ரூபாய்; கருப்பு ரகம் கிலோ, 62-142 ரூபாய் என, 44 குவிண்டால் எள், 4.63 லட்சத்துக்கு ஏலம் போனது.