ADDED : ஜூலை 21, 2025 04:57 AM
ஈரோடு மாவட்டம சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகை பூ ஒரு கிலோ, 560 ரூபாய்க்கு ஏலம் போனது. இதேபோால் முல்லை பூ-180, காக்கடா-150, செண்டு-மல்லி-100, கோழி கொண்டை-50, ஜாதி முல்லை-600, கனகாம்பரம்-400, சம்பங்கி-70, அரளி-100, துளசி-50, செவ்வந்தி-240 ரூபாய்க்கும் விற்றது.
அந்தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்-டுறவு சங்கத்தில் நடந்த வாழை ஏலத்துக்கு, 1,450 தார் வரத்தானது. செவ்வாழை தார் அதிகபட்சம், 900 ரூபாய், இதேபோல் தேன் வாழை-840, பூவன் தார்-650, ரஸ்-தாலி-780, மொந்தன்-420, ஜி-9 தார்-480, பச்சை நாடன்- 500 ரூபாய்க்கும் விற்றது. கதலி கிலோ, 36-58 ரூபாய், நேந்திரன், 12-22 ரூபாய் வரை விலை போனது.
பவானி அருகே மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த ஏலத்தில், வெள்ளை எள் கிலோ, 87.09 - 12௫ ரூபாய், சிகப்பு எள் கிலோ, 73.69 - 122.19 ரூபாய், கருப்பு எள், 88.22-135.19 ரூபாய் என, 184 மூட்டை வரத்தாகி, 12.39 லட்சம் ரூபாய்க்கு விற்றது. தேங்காய் பருப்பு ஐந்து மூட்டை வரத்தாகி கிலோ, 217.69 - 241.69 ரூபாய்; தேங்காய், 1,610 காய்கள் வரத்தாகி ஒரு காய், 23.15 - 37.71 ரூபாய் வரை விலை போனது.
அந்தியூர் வார சந்தை வளாகத்தில் இரு நாட்கள் கால்நடை சந்தை கூடியது. மொத்தம், 6,௦௦௦க்கும் மேற்பட்ட கால்நடை வரத்தானது. இதில் மாடுகள் அதிகபட்சம், 50 ஆயிரம் ரூபாய்; எருமை, 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்றது. மொத்தம், 1.50 கோடிக்கு கால்நடைகள் விற்றன.
வெள்ளகோவிலில் முருங்-கைக்காய் கொள்முதல் நிலையத்-துக்கு, கடந்த வாரம், 8 டன் முருங்கை வரத்தானது. ஒரு கிலோ அதிகபட்சம், 20 ரூபாய்க்கு விற்-றது, நேற்று, 15 டன் வரத்தானது. செடி முருங்கை கிலோ, 7 ரூபாய், மர முருங்கை, 8 ரூபாய், கருப்பு முருங்கை, 10 ரூபாய்க்கும் விற்-றது.