ADDED : ஆக 23, 2025 01:40 AM
* ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 108 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 195.50 முதல், 211.05 ரூபாய்; இரண்டாம் தரம், 120.89 முதல், 19௦ ரூபாய் வரை, 3,046 கிலோ கொப்பரை, 5.85 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த தேங்காய் ஏலத்துக்கு, 7,110 காய்கள் வரத்தாகின. ஒரு காய் அதிகபட்சம், 62 ரூபாய், குறைந்தபட்சம், 58.58 ரூபாய் என, 41.36 குவிண்டால் தேங்காய், 2.39 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
* சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 206 மூட்டை எள் வரத்தானது. கருப்பு ரகம் கிலோ, 11௧ ரூபாய் முதல் 160.29 ரூபாய்; சிவப்பு ரகம், 90.09 முதல், 136.89 ரூபாய் வரை, 15.32 டன் எள், 17.99 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த தேங்காய் ஏலத்தில், ஒரு கிலோ, 57 ரூபாய் முதல் 58 ரூபாய் வரை விற்பனையானது. வரத்தான, 1,198 கிலோ தேங்காய், 69 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் பருப்பு முதல் தரம் கிலோ, 205 ரூபாய், இரண்டாம் தரம், 141 ரூபாய்க்கும் விற்பனையானது. இதேபோல் தேங்காய் தொட்டி (கிலோ), 25 ரூபாய்க்கு விற்றது.
* திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், சூரியகாந்தி விதை ஏலம் நேற்று நடந்தது. காங்கேயம், முத்துார், வேடசந்தூர், பல்லாநத்தம், வடுகபட்டி, வாடிப்பட்டி, கடவூர், அழகாபுரி பகுதி விவசாயிகள், 23 ஆயிரம் கிலோ கொண்டு வந்தனர். ஒரு கிலோ அதிகபட்சம், 64.62 ரூபாய், குறைந்தபட்சம், 50.13 ரூபாய் என, 14.82 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.