ADDED : செப் 05, 2025 01:12 AM
* ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 1,060 மூட்டை நிலக்கடலை வரத்தானது. ஒரு கிலோ, 60.69 முதல், 72.89 ரூபாய் வரை, 33,694 கிலோ, 22 லட்சம் ரூபாய்க்கு விலை போனது.
* சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ மல்லிகை பூ, 820 ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை-320, காக்கடா-225, செண்டுமல்லி-80, கோழி கொண்டை-80, ஜாதி முல்லை-500, கனகாம்பரம்-620, சம்பங்கி-100, அரளி-90, துளசி-60, செவ்வந்தி-140 ரூபாய்க்கும் விற்பனையானது.
* அம்மாபேட்டை அருகே பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், பி.டி., ரக பருத்தி ஏலம் நடந்தது. ஏலத்துக்கு, 45௧ மூட்டை வரத்தாகி, கிலோ, 74.09 - 80.42 ரூபாய் என, 9.98 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
* ஈரோடு அருகே கருங்கல்பாளையத்தில் நேற்று நடந்த மாட்டு சந்தைக்கு, 6,000 முதல், 23,000 ரூபாய் மதிப்பில், 50 கன்றுகள், 23,000 முதல், 70,000 ரூபாய் மதிப்பில், 150 எருமை மாடுகள், 23,000 முதல், 85,000 ரூபாய் மதிப்பில், 200 பசு மாடுகள், 65,000 ரூபாய்க்கு மேலான விலையில் முற்றிலுமான கலப்பின மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில், 90 சதவீதம் விற்பனையானது.
* புன்செய்புளியம்பட்டியில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில், கால்நடை சந்தை நடந்தது. ஜெர்சி, சிந்து, நாட்டுமாடு, எருமை மற்றும் ஆடுகளை, விவசாயிகள் கொண்டு வந்தனர். ஜெர்சி மாடு, 20 ஆயிரம் முதல், 44 ஆயிரம் ரூபாய், சிந்து, 28 ஆயிரம் முதல், 55 ஆயிரம் ரூபாய், நாட்டுமாடு, 35 ஆயிரம் முதல், 70 ஆயிரம் ரூபாய், எருமை, 22 ஆயிரம் முதல், 36 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகின. வளர்ப்பு கன்றுகள், 6,000 முதல், 15 ஆயிரம் வரையும் விற்றது. சந்தைக்கு கொண்டு வரப்பட்ட, 700க்கும் மேற்பட்ட ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளில், 600 கால்நடைகள், ஒரு கோடி ரூபாய்க்கு விற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
* பவானி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 403 காய்கள் வரத்தாகி ஒரு காய், 28.05 - 36.10 ரூபாய் வரை, 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது.