ADDED : செப் 06, 2025 01:35 AM
* ஈரோடு மாவட்டம் பவானி அருகே மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 859 தேங்காய் வரத்தானது. ஒரு காய், 18.31 - 31.60 ரூபாய்க்கு விற்றது. தேங்காய் பருப்பு மூன்று மூட்டை வரத்தாகி கிலோ, 218.91 - 222.91 ரூபாய் வரை விற்றது.
* சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் கனகாம்பரம் கிலோ, 600 ரூபாய்க்கு ஏலம் போனது. மல்லிகை பூ, 360, முல்லை பூ, 220, காக்கடா, 225, செண்டு மல்லி, 60, கோழி கொண்டை, 150, ஜாதி முல்லை, 500, கனகாம்பரம்,620, சம்பங்கி, 60, அரளி, 70, துளசி, 60, செவ்வந்தி, 100 ரூபாய்க்கும் விற்பனையானது. இதேபோல் புன்செய்புளியம்பட்டி பூ சந்தையில், ஒரு கிலோ மல்லிகை பூ, 340, முல்லை, 200 ரூபாய், சம்பங்கி, 60 ரூபாய்க்கும் விற்றது.
* கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த தேங்காய் ஏலத்தில், குறைந்த விலை (கிலோ), 64 ரூபாய், அதிகவிலை, 65 ரூபாய்க்கும் விற்பனையானது. தேங்காய் பருப்பு முதல் தரம்) கிலோ, 223 ரூபாய் முதல் 226 ரூபாய்; இரண்டாம் தரம், 105 ரூபாய் முதல் 185 ரூபாய் வரை விற்பனையானது. தேங்காய் தொட்டி கிலோ, 26 ரூபாய்க்கு விற்பனையானது.
* அந்தியூரில் நேற்று நடந்த வெற்றிலை சந்தைக்கு, 50 கூடை வரத்தானது.
ராசி வெற்றிலை சிறியது ஒரு கட்டு, 10 ரூபாய், பெரிய கட்டு, 50-55 ரூபாய், பீடா வெற்றிலை கட்டு, 30-40 ரூபாய், செங்காம்பு ஒரு கட்டு, 5-15 ரூபாய் என, 2.25 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.