ADDED : செப் 07, 2025 01:13 AM
* ஈரோடு மாவட்டம் சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 30 கிலோ எடையில், 1,800 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தானது. ஒரு மூட்டை, 1,300 - 1,450 ரூபாய்க்கு விற்பனையானது. உருண்டை வெல்லம், 3,200 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,300 - 1,400 ரூபாய்க்கு விலை போனது. அச்சு வெல்லம், 450 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,400 - 1,450 ரூபாய்க்கு விற்றது. கடந்த வாரத்தைவிட உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் அதிகமாக வரத்தானது. நாட்டு சர்க்கரை மூட்டைக்கு, 30 ரூபாய் விலை உயர்ந்தது. அச்சு வெல்லம் மூட்டைக்கு, 60 ரூபாய் விலை சரிந்தது.
* பவானி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பாக்கு ஏலம் நடந்தது. காய்ந்த பாக்கு கிலோ, 180.80 - 191.50 ரூபாய், சாலி பாக்கு கிலோ, 375 - 350.50 ரூபாய், பாக்குபழம் கிலோ, 63.50 - 65.50 ரூபாய், பாக்கு பச்சை காய், 47 - 51.50 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம், 700 கிலோ பாக்கு வரத்தாகி, 68 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது.
* சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகை பூ கிலோ, 560 ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை பூ, 260, காக்கடா, 175, செண்டு மல்லி, 90, கோழி கொண்டை, 140, ஜாதி முல்லை, 500, கனகாம்பரம், 500, சம்பங்கி, 50, அரளி,60, துளசி, 60, செவ்வந்தி, 120 ரூபாய்க்கும் விற்பனையானது.
* பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று நடந்த கொப்பரை ஏலத்துக்கு, 3,783 மூட்டைகளில், ௧.௭௩ லட்சம் கிலோ கொப்பரை தேங்காயை, விவசாயிகள் கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 225.15 ரூபாய் முதல் 242.51 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 40 ரூபாய் முதல் 233.49 ரூபாய் வரை, ௩.74 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
* திருப்பூர் மாவட்டம் முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த தேங்காய் ஏலத்துக்கு, 39 விவசாயிகள், 10,687 தேங்காய் கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 69.35 ரூபாய், இரண்டாம் தரம் கிலோ, 50.05 ரூபாய்க்கும் ஏலம் போனது. 4.7 டன் தேங்காய், 3.௧௨ லட்சம் ரூபாய்க்கு விற்றது. இதேபோல், 917 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. ஒரு கிலோ அதிகபட்சம், 230.80 ரூபாய், குறைந்தபட்சம், 170.25 ரூபாய்க்கும் ஏலம் போனது.