ADDED : செப் 29, 2025 02:02 AM
* ஈரோடு மாவட்டம் அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் இரு நாட்கள் கால்நடை சந்தை கூடியது. ஜெர்சி இன மாடுகள், 2,500 ரூபாயிலிருந்து, 42 ஆயிரம் ரூபாய்; மலை மாடுகள், 3,௦௦௦ ரூபாய் முதல் 51 ஆயிரம் ரூபாய்; நாட்டு மாடுகள், 4,௦௦௦ ரூபாய் முதல் 55 ஆயிரம் ரூபாய்; எருமைகள், 3,௦௦௦ ரூபாய் முதல் 53 ஆயிரம் ரூபாய் வரை, இரு நாட்களில் 3,500க்கும் மேற்பட்ட கால்நடைகள் கொண்டு வரப்பட்டு, 1.25 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
* அந்தியூர் புதுப்பாளையம் விற்பனை சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நடந்தது. செவ்வாழை தார், 80-700 ரூபாய்; தேன் வாழை தார், 90-450, பூவன் தார், 120-550, ரஸ்தாளி தார், 270-650, மொந்தன் தார், 60-250, ஜி-9 தார், 30-150, பச்சைநாடன் தார், 240-420 ரூபாய்க்கும் விற்றது. கதளி கிலோ, 28-42 ரூபாய், நேந்திரன் கிலோ, 7-18 ரூபாய் என, 2,735 தார், 5.34 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
* திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்துக்கு, கடந்த வாரம், 5 டன் முருங்கை வரத்தாகி ஒரு கிலோ, 70 ரூபாய்க்கு விற்றது. நேற்று, 5 டன் வரத்தாகி ஒரு கிலோ செடி முருங்கை, 50 ரூபாய், மர முருங்கை, 60 ரூபாய், கருப்பு முருங்கை, ௭2 ரூபாய்க்கும் விற்றது.